நெல்லை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேறு தொகுதிக்காரர் முன்மொழிந்ததால் அமமுக வேட்பாளர் பால் கண்ணன் மனு தள்ளுபடி ஆனது.
அதுமட்டுமின்றி, சமக சார்பில் போட்டியிட்ட அழகேசன் வேட்பு மனு தவறாக நிரப்பப்பட்டதால் தள்ளுபடி ஆனது. சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மாரியப்ப பாண்டியன் மனுவும் செல்லாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்ப பாண்டியன் தன பணம் கட்டி மனுத் தாக்கல் செய்ததாக கோபத்துடன் கூறினார். அத்துடன் தனக்கு நாற்காலி ஒதுக்கப்படவில்லை என்று கூறி படுத்து புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், சமக வேட்பாளரும் தனக்கு நியாயம் வேண்டும் என்று கோஷமிடத் தொடங்கினார்.
எப்படியோ, இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் போலீசார் ’சோ டயர்ட்’ ஆகிவிட்டனர்.
மொத்தம் 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததில், 16 பேர் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.







