கடந்த ஒரு வாரமாகவே கன மழை, மித மழை என தமிழ்நாடு முழுவதும் பய மழையை பெய்வித்தது வானிலை ஆராய்ச்சிமையம். ஆனால், வழக்கம்போல் அது அறிவித்தபடி மழை பொழியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் அறிவித்தபடி சென்னையில் கனமழை பெய்து வானிலை ஆராய்ச்சி மைய மானத்தை காப்பாற்றியுள்ளது.
சென்னையில் சாலிகிராமம், கேகேநகர், வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர், திருவெற்றியூர், எண்ணூர், மணலியில் மழை பெய்துள்ளது.
திருவள்ளூர், செங்குன்றம் பகுதியில் மழை காலையிலிருந்து பெய்துகொண்டிருக்கிறது. மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதால் வட தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது. கடலுக்கு யாரும் செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நாகை, காரைக்கால், எண்ணூர், புதுச்சேரியில் 3ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.














