சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து ரேஷன் அரிசியை ஒரு டெம்போவில் கடத்திவருவதாக தகவல் கிடைத்ததையடுத்து இளம்பிள்ளை அருகே பொதுமக்கள் அதனை மடக்கி சிறைப்பிடித்தனர். பொதுமக்கள் முற்றுகையை மீறி டெம்போவை ஓட்ட முயன்ற டிரைவர் சின்ராசுவையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
டெம்போவில் 29 மூடைகளில் இருந்த இருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய வட்ட வழங்க அதிகாரி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், எங்கிருந்து, யாரால் அரிசி கடத்தப்பட்டது என்று விசாரித்து வருகின்றனர்.












