ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்த தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஆள் மாறாட்ட தகவல் கசிந்ததும் அவர் கடந்த 9ஆம்தேதியே மன அழுத்தம் காரணமாக கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் விலகுவதாக கடிதம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பின்பு விவகாரம் பெரிதான பின்பே மருத்துவக்கல்வி இயக்குநருக்கு புகார், அவர் மூலம் வேறு வழியின்றி போலீசுக்கு புகார் என பிரச்சினை சட்ட நடவடிக்கைக்கு வந்துள்ளது.
இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான தனிப்படையினர் உதிப்பை மட்டுமின்றி அவருக்கு உதவிய இருவரை பிடித்தால்தான் குறிப்பிட்ட முறைகேட்டின் உண்மை துலங்கும்.
தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து கிளறினால் இன்னும் பல குளறுபடிகள் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.















