கடனுக்கு நெருக்கடி: டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்

0
330

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை விவசாயிகள் நிறைந்த கிராமம். இங்கு விவசாயத்திற்காக தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளனர். தற்போது, கொரானா காலம் என்பதால் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், நிதி நிறுவனங்கள் கடனுக்கான மாதத் தவணையை கட்ட நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.


நிதி நிறுவன ஊழியர்கள் தங்களது வீடுகளுக்கே வந்து மாதத்தவணை கேட்டு தரக்குறைவாக பேசி வருவதால், தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதாக கூறி, விவசாயிகள் தங்களது கடன் தவணையை 6 மாத காலம் நீட்டித்து தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும், கடன் நெருக்கடி தொடர்ந்ததால், பேருந்து நிலையம் அருகே உள்ள உய்யவந்தான் கோயில் மைதானத்திற்கு டிராக்டர்களுடன் வந்து போராட்டம் நடத்த முயன்றனர். விவசாயிகளை காவல்துறையினர் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here