சிஎஸ்ஐ ஆயரிடம் ஆதரவு கேட்ட ஸ்டாலின்

0
841

நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தாழையூத்து சங்கர்நகர் சிமென்ட் ஆலை விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று மாலை களக்காடு ஏர்வாடி, மாவடி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து திண்ணை கூட்டங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென காலை 11.30 மணியளவில் நெல்லை திருமண்டல சிஎஸ்ஐ ஆயர் கிறிஸ்துதாசை வேட்பாளர் ரூபி மனோகரனுடன் சென்று சந்தித்தார்.
அவருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்ட ஸ்டாலின், சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டுச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here