மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது திருமங்கலம் பிரதான கால்வாய். இக்கால்வாய்க்கு பேரணையிலிருந்து அதாவது அணைப்பட்டியில் இருந்து திறந்துவிடப்படும். அதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றது.
ஆனால்,திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் இன்றுள்ள சுமார் 40,000 ஏக்கர் பாசனத்திற்கு போதுமானதாக இல்லை என்று இந்தப் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .இதுகுறித்து, விவசாயிகள் மூக்கன் சீராளன் கூறியதாவது:
இந்த கால்வாயால் விக்கிரமங்கலம், அய்யனார்குளம், சடச்சிபட்டி நாடாப் பட்டி , நாட்டார்மங்கலம், உச்சப்பட்டி, குப்பனும் பட்டி, அம்பட்டையன் பட்டி , திடியன், வாகைகுளம், உள்பட சுமார் 50 கிராமங்களுக்கு மேற்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் அடைந்தனர்.
ஆனால், காலப்போக்கில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக விக்கிரமங்கலம் அருகே விரிவாக்க வாய்க்கால் ஏற்படுத்தியதால் முறையாக விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை.

விரிவாக்க வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீர் பிரிந்து செல்வதால் தும்மக்குண்டு வரை விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் , கால்வாய் முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் மராமத்து வேலை பார்த்து கடை மடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான கால்வாயை அகலப்படுத்தவும் வேண்டாம்’ என்றார்.














