இரட்டை குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை

0
1181

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். மாந்திரீக தொழிலாளியான இவருக்கும் நெல்லை டவுன் அருகே குன்னத்தூரைச் சேர்ந்த பார்வதிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கலைமதி, அன்னலட்சுமி என 4 வயதான இரட்டைகுழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவனரை பார்க்க செல்லக்கூடாதென்று பர்வதியை கண்ணன் தடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பார்வதி, நேற்று மதியம் தனது உடலிலும், குழந்தைகள் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பார்வதியையும் குழந்தைகளையும் மீட்டுள்ளனர். இதில்பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த இருகுழந்தைகளுக்கும் நெல்லை அரசு மருத்துவம் னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமையில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தென்காசி கோட்டாட்சியர் ராமசந்திரனும் விசாரணை நடத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here