மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பராசக்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள், திருநங்கைகள் வசிக்கின்றனர்.
தற்போது, கொரோனா 2ஆவது அலை காரணமாக வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து, தகவலறிந்த பிரபல சினிமா வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் மனித நேயத்துடன் பார்வையற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 63 பேர்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.














