இந்தியாவுக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தலைநகர் ராஞ்சியில் நடந்தது. டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட மூவர் வெளியேறிய நிலையில் 224 ரன்கள் இருந்தன.
அடுத்து வந்த ரோஹித் சர்மா & ரஹானே ஜோடி அடித்து விளையாடியது. ரஹானே 115 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் 249 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். பின்னர் 212 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் பெற்ற நிலையில் இந்தியா டிக்ளேர் செய்ய , ட்ய்ஹென் ஆப்ரிக்கா ஆட்டத்தை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளிச்சம் போதாத காரணத்தால் ஆட்டம் அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.