ஆட்டோ டிரைவர் தற்கொலையில் அடிபடும் காவல்துறை

0
1322

சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம்  மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அயனாவரம் தண்ணீர் தொட்டி ஏ.டி.எம். அருகே நிறுத்தியிருந்த
தனது ஆட்டோவை சிலர் கடத்தியதாக டிபி சத்திரம்  காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் ஆட்டோவை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜேஷிடம் ஆட்டோ திருடிய நபர் அதே பகுதியில் அந்த ஆட்டோவை ஓட்டியதாக ராஜேஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த ராஜேஷ், தனது வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மிகுந்த வலியுறுத்தலுக்கு பிறகு ஆட்டோவை கடத்தியவரை போலீசார் பிடித்தனர். ஆனால், 3 நாட்களில் அவர் வெளியே வந்துவிட்டார்.
காப்பீடு மூலம் புதிய ஆட்டோ வாங்க நினைத்த நிலையில், போலீசார் எப்.ஐ.ஆர். நகல் வழங்க தாமதப்படுத்தியதாகவும்,  ராஜேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here