பிரேஸில் மருத்துவமனை தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
482

பிரேசிலில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘ பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் நகரில் மருத்துவமனை ஒன்றில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்களும் பலத்த காயமடைந்தனர்‘ என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here