ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலையில் படையெடுத்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி எறிந்தனர்.
இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது















