நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சக்தி அனுசுயா என்ற 5வயது மகளும், துரைசிங் என்ற 4வயது மகனும் உள்ளனர்.
மாரியம்மாள் மனநிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் தனது இரு குழந்தைகளின் முகத்தின் மீது தலையணையால் அமுக்கியதில் சக்தி அனுசுயா சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இதற்கிடையில் மாரியம்மாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். துரைசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் மாரியம்மாளுக்கு அனாலிகா பிரகாஷினி என்ற பெண் குழந்தை இருந்ததும் அந்த குழந்தைக்கு எறும்பு பவுடர் கலந்த உணவை ஊட்டியதால் இறந்து போனதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது
மனநலன் பாதித்ததால் மாரியம்மாள் இந்த கொலைகளை செய்தாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்றதா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.









