உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

0
518

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்தது.

இதனை கடந்த 18 ஆம் தேதி மத்திய அரசு உறுதி செய்ததையடுத்து இன்று நான்கு புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல பிரதேசம் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here