இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு இருக்கக் கூடிய 3 ஹவுஸ் மேட்ஸை தேர்வு செய்யுமாறு உத்தரவு வழங்க அதன்படி பெரும்பாலோனோரின் தேர்வாக இருந்தவர்கள் தர்ஷன். மதுமிதா மற்றும் சாண்டி இந்த தேர்வை ஏற்று கொண்ட கமல் மூவருக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் ஒரு ஹவுஸ்மேட்ஸை எலிமினேட் செய்யும் நடைமுறை வந்தது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் லோஸ்லியா வரிசையாக அமர. சிறிய பரபரப்பு ஏற்படுத்தி லோஸ்லியாவை காப்பாற்றிய கமல். சாண்டி மற்றும் கவினிடம் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ள போட்டியாளர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள பாடல்களை பாடும் கேட்டுக் கொண்டார் கமல்.
சாக்ஷி, அபிராமி மற்றும் சேவ் செய்யப்பட்ட லோஸ்லியா ஆகியோருக்கான பாடல்களை இருவரும் பாட நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டியது. பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு சாக்ஷி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார் கமல்.
இதை கேட்டதும் ஷெரீனும் அபிராமியும் உடைந்து அழ சாக்ஷிக்கு அனைத்து ஹவுஸ் மேட்ஸும் பிரியா விடை கொடுத்து அனுப்பினர். வெளியில் வந்த சாக்ஷி கமலை சந்தித்தார் அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சாக்ஷி.