உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நெரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்பநிதி நடக்கவிருக்கும் இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டார்

இதற்காக இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார் இன்பநிதி.
அவரை வழி அனுப்புவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர்.
முதல்வர் வருகையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது..