பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சமயத்தில் படப்பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ‘ யாரை எங்கே வைக்கவேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும்’ என்று காட்டமாக பேசினார். மேலும், வழக்கு தொடர்பான விசாரணையை யும் கடுமையாக விமர்சித்தார்.
இதை தொடர்ந்து விழா நடத்த அனுமதி அளித்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி கோபத்தை தணித்தது அரசு. அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து விஜய்யை தாக்கிவந்தனர்.
இந்நிலையில், கத்தி, காவலன் போல் இந்த படத்துக்கும் கவசம் போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் விஜய் தரப்பை தாக்கியதோ என்னவோ, நாகர்கோவிலுக்கு வந்த விஜய் தந்தை அரசை பாராட்டி பேசினார்.
’நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது’ என்றார்.













