ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் தேசிய மாநாடு இலங்கையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து எதிர் வரும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தமது சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக மகிந்த ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.