தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் இருந்து இரு அம்மன் சிலைகள் உட்பட ஒரு பைரவர் சிலை பக்தர்கள் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அலையில் அடித்துக் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் அந்த சிலையை மீட்டு கடற்கரை ஓரத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி வருகின்றனர்.









