திருச்சி லால்குடியை சேர்ந்த 20 வயது பார்த்தசாரதி, பிரேக் அப் ரூல்ஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமானார். டிக்டாக் செயலி மூலமும் மகிழ்வூட்டி வந்தார்.
இவருக்கும் இவரது நண்பரான தினேஷுக்கும் விநாயகர் சதுர்த்திக்கு வசூல் செய்து சிலை வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியவர் ஒருவரிடம் புகார் தெரிவித்த பார்த்தசாரதியை இரவில் அழைத்துச்சென்ற தினேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதையடுத்து நேற்று தினேஷ் கைது செய்யப்பட்டார்.














