கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜா சிங்குக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தந்தை – மகனுக்கு ஏற்பட்ட காயங்களை போன்றே இவருக்கும் காயங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வர புரம் ஊராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் கொலைவழக்கில் இவர் நான்காவது குற்றவாளி என போலீசார் நிர்ணயித்துள்ளனர். எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தான் இவரை விசாரித் துள்ளனர்.