ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை கல்லூரி மாணவி ஜதினா கொரோனா நிவாரண நிதியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜதினா இவர் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம் பணத்தை கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்த கொரொனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டெக் புஷ்பராஜனிடம் இன்று வழங்கினார்.