ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு ஆண்டாள் என்பவர் சத்துணவு அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பின்னர் அந்த பொறுப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என கூறப்பட்டது. இதனால் ஆண்டாளை பணியில் அமர்த்தவில்லை.
இதனால் தன் பணி நியமன உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவ்ழக்கை விசாரித்த நீதிபதி விஎம் வேலுமணி, ஆட்சியர் பொறுப்பற்ற முறையில் நடந்ததாக கண்டித்தார். மேலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார்.