கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். கடந்த காங். கூட்டணி அரசை கலைக்க பாஜக பெருமுயற்சி எடுத்தபோது பாதுகாப்பு கவசமாக இருந்தவர். 4 முறை காங்கிரஸ் கூட்டணி அமைச்சராக இருந்த இவரை நேற்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 4 நாட்களாக நடந்த விசாரணையில் சிவகுமார் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று அதற்கு காரணம் தெரிவித்தனர். சிவகுமாரை கைது செய்தபோது அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடினர்.













