கோவை கணபதி இந்திரா நேரு வீதி பகுதியைச் சேர்ந்த கில்பர்ட் பால்ராஜ் மனைவி சுகந்தி (45).இவர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.ஒரு மகள் செரின் தேவி ரங்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் கணபதி பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலம் செரின் தேவி கிஷோரிடம் பேசிவந்தார்.
இந்நிலையில் சுகந்தி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு ஆழியாறு அணைக்கு சுற்றுலா சென்றார். அந்த சமயத்தில் கிஷோர் ஷெரின் தேவிக்கு தொடர்ந்து செல்போன் மூலம் அழைத்து வந்துள்ளார். ஆனால் தாயார் மற்றும் குடும்பத்தாருடன் இருந்ததால் ஷெரின் தேவி செல்போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு கிஷோர் ஷெரின் தேவியின் வீட்டிற்கு முன்பு வந்து நின்றுள்ளார் .அதைக்கண்டு வீட்டைவிட்டு வெளியே வந்த செரின் தேவியிடம் கிஷோர் பேசிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த அவரது அம்மா சுகந்தி இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார் .இதையடுத்து கிஷோர் சுகந்தி இடம் தகராறு செய்ததோடு அவரை கைகளால் தாக்கியுள்ளார் .இதில் காயமடைந்த சுகந்தி இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்