கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்டபொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை சிகரெட்டுகளில் அடைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர், அப்போது அங்குள்ள ஒரு கல்லூரியின் முன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர், அவர்களிடம் மொத்தம் 1கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ராமகிருஷ்ணன் ( 26),மணி விக்னேஷ் (19), சிவக்குமார் (20) என்பது தெரியவந்தது. .அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறிய போது, ‘இதுபோன்ற சட்ட விரோத செயல்களை பற்றி தகவல் தெரிந்தால் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212க்கும் 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியங்கள் காக்கப்படும்’ என்றார்.















