நீலகிரி மாவட்ட ஆட்சியராக சுப்ரியா சாகு இருந்தபோது தூய்கை நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொண்டார். அதை இப்போதைய ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவும் தொடர்கிறார்.
கடந்த சனவரி 1ஆம்தேதி முதல் 21 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம்தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பான புட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோர் ரூ.5 செலுத்தி 1 லிட்டர் குடிநீரை பாத்திரங்களில் பெற்றுக்கெள்ளலாம். இது 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இந்நிலையில்உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை, பான் மசாலா, குட்கா, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மென்று பொது இடங்களில் துப்பினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கண்காணிப்பு மற்றும் வசூலில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பின்பற்ற வேண்டியது பொதுமக்கள் கடமை.















