கோவில்பட்டியில்பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

0
82

:

ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும். பி.எஸ்.என்.எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளின் துவக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். 2-வது வி.ஆர்.எஸ். கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம், இ.பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். கேசுவல் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் 2 தவணை பஞ்சப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.மகேந்திர மணி ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவி செயலாளர்கள் கே.சுப்பையா, கே.கந்தசாமி, கோலப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய உதவித் தலைவர் எஸ்.மோகன்தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஓய்வூதியர் சங்க கிளை உதவித் தலைவர் பி.முத்துராமலிங்கம், உதவி செயலாளர் பி.பாலகிருஷ்ணன், ஊழியர் சங்க கிளை செயலாளர் செண்பக முத்து, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் டி.தங்க மாரியப்பன் உள்ளிட்ட கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here