கொரோன ஊரடங்கை தொடர்ந்து களக்காட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன . டீக்கடைகள், மளிகை, காய்கறி, மருந்து கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் களக்காடு பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாசாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தினர். அப்போது அண்ணாசாலையில் முழு ஊரடங்கை மீறி பெண்கள் அழகு நிலையம் ஒன்றும், திண்பண்ட பொருட்கள் மொத்த விற்பனை கடையும் திறக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.









