கலெக்டர் முன்னிலையில் ஜீவசமாதியை ஒத்திவைத்த சாமியார்

0
1364

 

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த 71 வயதான இருளப்பசாமி ஜீவ சமாதி அடையப்போவதாக அவர் அறிவித்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் அவரிடம் ஆசி பெற குவிந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 5 மணிக்குள் ஜீவ சமாதி அடையப்போவதாக அவர் அறிவித்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தனர். கலெக்டர் ஜெயகாந்தன் கூட சாமியை நோக்கி கைகூப்பியவாறு பக்தியுடன் காத்திருந்தனர்.
ஆனால், விடிய விடிய காத்திருந்தும் அவர் ஜீவசமாதி அடையவில்லை. ஜீவ சமாதி அடையும் முடிவை வேறு ஒரு தினத்துக்கு ஒத்திவைத்ததாக இருளப்ப சாமி கூறினார். அவரை போலீஸ் பாதுகாப்ªபுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பேசிய கலெக்டர், ‘ஜீவசமாதி அடைய முயற்சிப்பது தவறு இல்லை. அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமில்லை’ என்றார். ஆனால், தமிழ்மணி போன்ற மூத்த வழக்கறிஞர்கள், ‘ ஜீவ சமாதி தற்கொலை முயற்சி. எனவே, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என கூறினர்.
இருளப்பசாமி சொந்த ஊர் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் ஜீவ சமாதியடையும் இடத்துக்கு செல்லவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஜீவ சமாதி அடைய போவதாக தெரிவித்துள்ளார்’ என்றார் அவரது மனைவி இருளாயி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here