ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் 40 சாதாரண படுக்கைகள் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி, ‘ ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் பங்களிப்போடு 1000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ’ எனத் தெரிவித்தார்.













