விமான நிலையத்தில் ரூ.17.68 லட்சம் தங்கம் பறிமுதல்

0
1433

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த மலிண்டோ விமானத்திலிருந்து இறங்கிவந்த பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நடந்தது. அப்போது, சென்னையை சேர்ந்த ஜும்மா கான் மடிக்கணினியில் தகடுகளாக 450 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யபப்ட்டார். தங்கத்தின் மதிப்பு ரூ.17.68 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here