மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தும்.
தற்போது மாணவர் உதித் சூர்யா தாம் படிப்பை தொடர இயலாது என கடிதம் அளித்துள்ளார். உதித்சூர்யா, நீட் தேர்வை எழுதினாரா என விசாரணை நடக்கிறது.
அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரிபார்க்கப்படும். அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். போலீஸ் விசாரணை அறிக்கை கிடைத்ததும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.