தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றிய பீதியில் நாடு இருக்கும் நிலையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற முதல் வாயில் வழியே ‘ராம் ரஹீம்’ என்ற கோஷத்துடன் நுழைய முயன்ற அந்த வாலிபர் டெல்லியை சேர்ந்த சாகர் என தெரியவந்துள்ளது. அவர் குறித்து நாடாளுமன்ற காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார். அவருடன் யாரும் வந்திருக்கிறார்களா என்று தேடுகின்றனர்.














