வைப்பாறு கோட்டைமேட்டை சேர்ந்த கோட்டைபாண்டி (55) என்பவரும் எடை மெஷின் உரிமையாளர் ரமேஷும் (30) ஸ்ரீராமபுரத்திற்கு தெற்குப் புறமுள்ள முருங்கை தோட்டத்தில் காய்பறித்து எடை போட்டு அனுப்ப சென்றனர்.

அப்போது இடியுடன் கூடிய பெருமழை பெய்தது. இருவரும் முருங்கை மரத்தின் கீழ் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இருவரின் உடலிலும் எந்த காயமும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








