மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், கல்புளிச்சான் பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடா (கிடாய்) முட்டு போட்டி நடைபெற்றது. உயர்நீதிமன்ற அனுமதி பெற்று தகுந்த பாதுகாப்புடன் நடைபெற்ற விழாவில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.
75 அடி ,அதாவது முட்டுகள் முட்டி களத்தில் நின்றால் சரி பாதி என பரிசு அறிவிக்கப்பட்டது .
வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பித்தளை பானை மற்றும் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், கிடா முட்டு சங்கத்தலைவர் வீரசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை,
கல்புளிச்சான்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.














