காந்தி நினைவிடத்தில் விழுந்த சூரிய ஒளி – பார்வையாளர்கள் பரவசம்

0
7

கன்னியாகுமரியில்
காந்தி ஜெயந்தி: காந்தி மண்டபத்தில் அபூர்வ ஒளி
ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந் பங்கேற்பு

காந்தி ஜெயந்தி தினமான நேற்று (அக் 2ம்தேதி) கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழுந்த சூரிய ஒளியை மாவட்ட ஆட்சியர் பிரதாப். காவல்துறை கண்காணிப்பாளர்அன்ஷூல் நாகர், குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் பன்மொழி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

காந்தியின் அஸ்தி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைப்பதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட இடத்தில் காந்தி மண்டபம் கட்டப்பட்டது.காந்தி நினைவிடத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 2 ஆம்தேதி பகல் 12 மணிக்கு சூரிய ஒளி விழும். இந்த அபூர்வ நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்

இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்தி அஸ்தி கட்டம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.காலை 10 மணிமுதல் காந்தி மண்டபத்தில் தேசபக்தர்கள் தேசபக்தி பாடல்கள் பாடினர்.கொட்டாரம் சர்வோதையா சங்கம் சார்பில் கைராட்டையில் நூற்பு வேள்வி நடந்தது.


நண்பகல் 12.05 மணிக்கு காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீதுசூரிய ஒளி விழுந்தது. ஊதுபத்தியை ஏற்றி அதன் புகை மூலம் ஒரு வெள்ளை துணியில் சூரிய ஒளி விழுந்ததை அனைவருக்கும் தெரியும் படி காண்பித்தார்.அப்போது காந்தி மண்டபத்தில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் செல்போனில் போட்டோ மற்றும் செல்பி எடுத்தனர்‌.இந்த அபூர்வ சூரிய ஒளி சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது.


நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதாப் எஸ்பி அன்ஷூல் நாகர், பயிற்சி கலெக்டர் மோனிகா,நாகர்கோவில் ஆர்டிஒ செந்தில்வேல் முருகன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன், மற்றும் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆணையர் பட்டுசாமி,கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ்,மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here