விளாத்திகுளத்தில் கந்த சஷ்டியை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சார்பாக சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நவ.10 முதல் தினசரி சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வந்தது. சூரசம்கார தினமான நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு சாமி புறப்பாடு நிகழ்வு தொடங்கியது.
4 மணிக்கு காய்கறி மார்க்கெட் விநாயகர் திருக்கோவில் அருகே கஜமுகன் சூரன் வதம் செய்தல் நிகழ்வு,4.45 மணிக்கு கரையடி காளியம்மன் கோவில் அருகே சிங்கமுகன் சூரன் வதம் செய்தல் நிகழ்வு,6 மணிக்கு காய்கறி மார்க்கெட் முன்பு தாரகாசுரன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.










