காமநாயக்கன்பட்டியில் திருத்தேர் பவனி

0
569

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து விழாவின் ஒவ்வெரு நாளும் சிறப்பு திருப்பலி, நற்கரை பவனி நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரடி திருப்பலி மற்றும் மாதா திருத்தேர் பவனி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இன்று அதிகாலையில் பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் ஆலய வளாகத்தில் தேரடி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு தேரில் விண்ணரசி மாதா அன்னையும், மற்றொரு தேரில் பரலோக மாதா அன்னையும் நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர் விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அருள்ராஜ் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here