கோவை கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 1.8 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

0
443


,

தமிழ்நாடு முழுவதும் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சாயிபாபாகாலனி பகுதியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான 5 அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிமுதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அதிகாரிகள் மேற்கொண்ட  இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்ற பட்ட பணம் தொடர்பாக  உதவி இயக்குனர் சூர்யா மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here