இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற உப்பளத் தொழிலாளி மகன்

0
123

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த உப்பள தொழிலாளி பூமயில்.இவர் தினசரி உப்பளத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் முத்துவேல் வேப்பலோடை அரசு ஐடிஐயில் மெரைன் பிரிவில் ஓராண்டு படிப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வில் பங்கேற்று 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இந்திய ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவருக்கு அரசு ஐடிஐ ஆசிரியர் ஆசிரியை, ஊர் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here