தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
தூத்துக்குடி மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா பசும்பொன் மக்கள் தேச கட்சி தலைவர் இவரது கட்சி நிர்வாகி இசக்கிராஜ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய நகையை அடகு வைக்க தனியார் நிதி நிறுவனத்தை அணுகும் போது அந்த நகை போலி நகை என தெரிய வந்தது இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மீது பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டுமென மனு அளித்தார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த வியாபாரிகள் சங்கத்தினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் அவதூறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை அவரது வீட்டில் வைத்து தென்பாகம் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவர் மீது 308/4 பிரிவின் கீழ் கொலை மிரட்டல் பணம் கேட்டு மிரட்டல் ஆகிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில்
இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவலறிந்து, பசும்பொன் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அசம்பாவி தங்களைத் தடுக்கக் காவல் நிலையத்தின் முதன்மை நுழைவு வாயில் பூட்டப்பட்டு, வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக இசக்கி ராஜாவை தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது வாகனத்தை மறித்து அவரது கட்சியினர் தடுத்து நிறுத்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் காவல் நிலையத்தில் இசக்கி ராஜாவின் ஆதரவாளர்கள் அதிகமானோர் கூடியுள்ளனர் காவல்துறையினரும் அதிகமானோர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜேம் 1 நீதிபதி சுமதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர் விசாரணை நடத்திய நீதிபதி வரும் அக்டோபர் ஆறாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இந்த நிலையில் பி எம் டி கட்சி தலைவர் இசக்கி ராஜா மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது போலீசார் அவர்களிடம் கலைந்து செல்லும்படி பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து போலீசாருக்கும் அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் போலி நகை விற்பனை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது














