மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைச்சர்கள் முன்னிலையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி

0
930

:

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி

நடைபெற்றது.
மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மானவ மாணவியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர்.
ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.


இதனைக் கேட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதே கல்லூரி முதல்வரிடம் இது குறித்து கேட்டு கோபப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, மருத்துவக்
கல்வி இயக்குனரகம், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க பொதுச் செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தில் இணையதளத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்த உறுதி மொழியை பதிவிறக்கம் செய்து, அதனை மாணவர்களிடம் கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்ததாகவும் , சம்பந்தப்பட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் வேண்டும் என்றே இதனை செய்யவில்லை எனவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here