தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி, பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில், விழிப்புணர்வுக்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடைரோந்து நடைபெற்றது. கோவில்பட்டி காவல்துறை ஏ எஸ் பி நீல் சர்மா தலைமையில் ஏ எஸ் பி அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் இருந்து நடைரோந்து தொடங்கியது. எட்டயபுரம் சாலை, புதுரோடு, கடலையூர் சாலை, புதுக்கிராமம், ரெயில்வே சாலை, மெயின் ரோடு, மார்க்கெட் சாலை வழியாக துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் சென்ற நடைரோந்து
கோவில்பட்டி பயணியர் விடுதியில் நிறைவு பெற்றது. இதில் கோவில்பட்டி உட்கோட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.














