மதுரைக்கும் தூதகுக்குடிக்கும் நடுவே நடுவானில் விமானத்தில்நடந்த திருமணம் பற்றி விசாரணைக்கு
உத்தரவிட்டது மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம்.
மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் மகன் ராகேஷ் என்பவருக்கும், மதுரையை சேர்ந்த தொழிலதிபர் மகள் தீக்சணாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர்கள் திருமணத்தை வித்தியாசமாக நடந்த நினைத்த இருகுடும்பத்தினரும் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
அதன்படி நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் காலை 7 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தாண்டி செல்லும் பொழுது நடுவானில் திருமணம் நிகழ்வு நடைபெற்றது.

இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது. ஊரடங்கு காலத்தில் நடந்த இந்த தரமான சம்பவம் இப்போது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
மானத்தின் திருமண வீடியோவை கண்ட மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் விசாரணை முடியும் வரை விமானத்தில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் அளிக்குமாறு விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.