தூத்துக்குடி மீள விட்டானில் புதிதாக திறக்க இருந்த மதுபானக்கடையை அகற்றக் கோரி சமூக சேவகர் திரு சந்தான முத்து தலைமையில் மீள விட்டான் மற்றும் பண்டாரம்பட்டி ஊர் மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிதாக கட்டியுள்ள மது பானக் கடை முன்பு மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார் வந்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.














