சிறு, குறு விவசாயிகளுக்கு 60 வயது நிறைவடையும்போது மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கான பதிவை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்த திட்டப்படி 18 வயது முதல் 40 வயதுவரை பிரீமியத்தொகை செலுத்தி சேரலாம். ஒரே குடும்பத்தில் பலரும் சேரலாம். அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையில்பதிவு செய்துகொள்ளலாம்.













