தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ஐந்தருவி புறவழிச் சாலையில் உள்ள படகு குளம் எதிரே உள்ள வீட்டில் இரவு திடீரென 12 அடி நீளமுள்ள அபூர்வ பாம்பு இனமான ராஜ நாகம் புகுந்தது.
பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தென்காசி தீயணைப்பு துறையினர் தலைமையில் பாம்பை பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.