நெல்லை அருகே அரசு பேருந்து – சரக்கு வாகனம் மோதி இருவர் பலி

0
1666

நெல்லையருகே அரசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை ரயில்வே பாலத்தில் இன்று காலை நெல்லையிலிருந்து வந்த சரக்கு வாகனமும் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

களக்காட்டை சேர்ந்த மகேஷ் என்ற மாயாண்டி(36) மற்றும் நாகர்கோவில் சுரேஷ்(20) ஆகிய இருவரும் ஒரு சரக்கு வாகனத்தில் நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி நொறுங்கியது. அதில் சரக்கு வாகனத்தில் வந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற மூன்றடைப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது கறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. இதனால் அங்கு ஒரு வழி பாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தும் இன்னும் பாலம் திறக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன எனவே மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில பணிகள் முடிவடைந்ததால் அதனை பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here